தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வெடிப்புறப் பேசு

வெடிப்புறப் பேசு

வெடிப்புறப் பேசு


ADDED : டிச 09, 2024 11:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 09, 2024 11:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்; மாநகராட்சி சொத்து வரி உயர்வைக் கண்டித்து திருப்பூரில் காங்., - கம்யூ., உள்ளிட்ட தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை மாநகராட்சியை விட, திருப்பூர் மாநகராட்சியில் மிக அதிகமாக வரி விதிக்கப்பட்டுள்ளது. எனவே, சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்; வாடகை கட்டடங்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. இதனால் தொழில் பாதிக்கப்படும்.

இவற்றை திரும்பப் பெறக் கூறி, தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சியினர் சார்பில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூ., கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ரவிசந்திரன் தலைமை வகித்தார். திருப்பூர் எம்.பி., சுப்பராயன், மா.கம்யூ., கட்சி மாவட்ட செயலாளர் முத்துகண்ணன், காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், வி.சி.க., வடக்கு மாவட்ட தலைவர் மூர்த்தி, முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் சையது முஸ்தபா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அபுசாலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பெண்கள் உள்ளிட்ட ஏராளமான நபர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, மாநகராட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us