/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க ஊராட்சியில் சிறப்பு ஏற்பாடு
/
பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க ஊராட்சியில் சிறப்பு ஏற்பாடு
பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க ஊராட்சியில் சிறப்பு ஏற்பாடு
பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க ஊராட்சியில் சிறப்பு ஏற்பாடு
ADDED : ஜூலை 08, 2025 09:54 PM

உடுமலை; போடிபட்டி ஊராட்சியில் கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகள், சிறப்பு கூட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எளிதில் தகவல் அளிக்க, சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிராம ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம், அரசு விழாக்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு செயல்பாடுகள் நடக்கிறது.
இதுதவிர, சிறப்பு வரிசெலுத்தும் முகாம்கள், மருத்துவ முகாம்கள், குடிநீர் நிறுத்தம் உட்பட அனைத்தும் குறித்து, பொதுமக்களுக்குஊராட்சி நிர்வாகங்களின் சார்பில் தகவல் அளிக்க வேண்டும்.
நோட்டீஸ் வழங்குவது, அறிவிப்பு பலகையில் குறிப்பிடுவது, வாட்ஸ் அப் குரூப்களில் பகிர்வது வாயிலாக, தகவல் அளிக்கப்பட்டது.
ஆனால் இந்த வசதிகள் அனைத்தும், மக்களை சென்றடைவதில்லை. பெரும்பான்மையான மக்களிடம் தொழில்நுட்ப வசதிகள் இருப்பதில்லை.
இதனால் போடிபட்டி ஊராட்சியில், பொதுமக்களிடம் தகவல் அளிப்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு கிராம சபைக்கூட்டங்கள், குடிநீர் நிறுத்தம், வரி செலுத்துவதற்கான முகாம் உட்பட முக்கிய நிகழ்வுகள், அரசு விழாக்கள் குறித்து பொதுமக்கள் கம்ப்யூட்டர் வாயிலாக, 'குறுந்தகவல்' அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:
முக்கிய தகவல்களை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்கு, மத்திய தொலைதொடர்பு நிறுவனத்திலிருந்து, 'பல்க் எஸ்.எம்.எஸ்' வசதிக்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன் வாயிலாக அனைத்து மொபைல்களுக்கும், தகவல் குறுஞ்செய்தியாக ஒரே நேரத்தில் அனுப்ப முடியம். சாதாரண மொபைல்களிலும் இந்த குறுஞ்செய்திகளை பெற முடியும்.
இவ்வாறு கூறினர்.