/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறப்பு பஸ் இயக்கம்; விடுப்பு எடுக்க தடை
/
சிறப்பு பஸ் இயக்கம்; விடுப்பு எடுக்க தடை
ADDED : அக் 29, 2024 06:38 AM

திருப்பூர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தொடர்ந்து சிறப்பு பஸ்களை இயக்க வேண்டியிருப்பதால், இன்று (29ம் தேதி) முதல் வரும், நவ., 1 வரை போக்குவரத்து ஊழியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு சென்னை உட்பட மாநிலத்தின் எட்டு கோட்டங்களில் இருந்து, 14 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம் நேற்றிரவு துவங்கியது. இன்றும், நாளையும் முழு அளவில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
வழக்கமான பஸ்களுடன் சிறப்பு பஸ்களையும் விடியவிடிய தொடர்ந்து இயக்க வேண்டியிருப்பதால், டிரைவர், நடத்துனர்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டிரைவர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று முதல் வரும், நவ., 3 வரை விடுப்பு எடுக்க போக்குவரத்து கழகம் தடை விதித்துள்ளது.
'பொதுமக்கள் நலன் கருதி விடுப்பு எடுப்பதை தவிர்க்க வேண்டும்; குறித்த நேரத்தில் தவறாது பணிக்கு வந்து, தேவைகேற்ப சிறப்பு பஸ் இயக்கத்துக்கு ஒத்துழைக்க வேண்டும். அதிகளவு பயணிகள் பஸ்களில் பயணிக்க கூடும் என்பதால், கவனமுடன் பஸ்களை இயக்க வேண்டும்,' என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரம், ' தவிர்க்க இயலாத அவசர, மருத்துவ விடுப்புகளுக்கு டிரைவர், நடத்துனருக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்,' என போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் தரப்பில் இருந்து, அனைத்து கோட்ட, கிளை மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

