/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று இரவு முதல் சிறப்பு பஸ் இயக்கம்
/
இன்று இரவு முதல் சிறப்பு பஸ் இயக்கம்
ADDED : ஏப் 18, 2025 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; பயணிகள் வசதிக்காக இன்று இரவு முதல், வரும், 20 ம் தேதி வரை, 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
சனி, ஞாயிறு வார விடுமுறையை முன்னிட்டு, திருப்பூரில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இன்று புனித வெள்ளி விடுமுறை என்பதால், இன்று இரவு முதலே சிறப்பு பஸ் இயக்கம் துவங்குகிறது; வரும், 20ம் தேதி இரவு வரை பஸ் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் புதிய மற்றும் கோவில்வழி பஸ் ஸ்டாண்ட், மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 60 பஸ்கள், பயணிகள் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.