/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ் இயக்கம்
/
திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ் இயக்கம்
ADDED : மே 10, 2025 02:42 AM
திருப்பூர், : பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், வரும், 12ம் தேதி சித்ராபவுர்ணமி சிறப்பு பூஜை, கிரிவலம் நடக்க உள்ளது. திருப்பூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 65 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
திருப்பூர், பெருந்துறை, பவானி, சங்ககிரி, அரூர், செங்கம் வழியாக திருவண்ணாமலைக்கு இன்று இரவு முதல் வரும், 12ம் தேதி இரவு வரை பஸ் இயக்கப்படும். கூட்ட நெரிசலை தவிர்க்க பஸ்களை முன்பதிவு செய்து பயணிக்கும் வசதியும் உள்ளது.
விரும்பும் பயணிகள் முன்பதிவு தகவல் மையத்தில் டிக்கெட் முன்பதிவும் செய்து கொள்ளலாம் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.