/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்றும், நாளையும் சிறப்பு பஸ் இயக்கம்
/
இன்றும், நாளையும் சிறப்பு பஸ் இயக்கம்
ADDED : ஜன 20, 2024 02:18 AM
திருப்பூர்:பயணிகள் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, இன்றும், நாளையும் சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த, 12ம் தேதி முதல் மூன்று நாட்கள் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. முதல் இரு நாட்கள் இல்லாவிட்டாலும், 14ம் தேதி நாள் முழுதும் சிறப்பு பஸ்கள், பயணிகள் கூட்டத்தால், நிரம்பின. வெளியூர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக, 16 மற்றும், 17 ம் தேதி சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. ஆனால், விடுமுறை முடியாததால், பஸ்களில் எதிர்பார்த்த கூட்டமில்லை.
இந்நிலையில், இன்றும், நாளையும், கோவில்வழி, புதிய மற்றும் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 70 சிறப்பு பஸ்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. பொங்கல் விடுமுறை முடிந்து, நாளை அதிகமானோர் திருப்பூர் திரும்புவர் என்பதால், இந்த ஏற்பாடு என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.