/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்றும் நாளையும் சிறப்பு பஸ் இயக்கம்
/
இன்றும் நாளையும் சிறப்பு பஸ் இயக்கம்
ADDED : ஏப் 05, 2025 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வார விடுமுறையை முன்னிட்டு, இன்றும், நாளையும், 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பிறமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, திருப்பூர் கோவில்வழி, புதிய மற்றும் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இன்று மதியம் முதல் நாளை நள்ளிரவு வரை இந்த பஸ்கள் இயங்கும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, துவக்க, நடுநிலைப்பள்ளி இறுதியாண்டு தேர்வுகள் இன்னமும் முடியாததால், நடப்பு வாரம் பஸ்களில் கூட்டம் சற்று குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.