ADDED : ஜன 31, 2026 04:39 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: வார விடுமுறை நாட்களில் வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பஸ்களை போக்குவரத்து கழகம் இயக்குகிறது.
அவ்வகையில், இன்றும், நாளையும் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 25, கோவில்வழியில் இருந்து, 60, மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 25, என மொத்தம், 110 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு பின் கடந்த வாரம் சிறப்பு பஸ் இயக்கிய போதும், கூட்டம் அதிகமாக இல்லை.
எனவே, சிறப்பு பஸ் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. நாளை (பிப். 1ம் தேதி) தைப்பூசம், பவுர்ணமி என விசேஷ தினங்கள் இணைந்து வருவதால், பழநி, திருவண்ணாமலைக்கு அதிகளவில் பொதுமக்கள் செல்லக்கூடும் என்பதால், சிறப்பு பஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
