/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்கள் கூட்டத்துக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கம்
/
மக்கள் கூட்டத்துக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : ஜன 18, 2025 12:20 AM
திருப்பூர், ; 'இன்றும், நாளையும் மக்கள் கூட்டத்துக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொங்கல் பண்டிகைக்கு சொந்த மாவட்டம் சென்றவர்கள், திருப்பூர் திரும்ப ஏதுவாக சிறப்பு பஸ் இயக்கம் நேற்றிரவு மீண்டும் துவங்கப்பட்டது. இன்றும், நாளையும் திருப்பூரில் இருந்து சேலம், விழுப்புரம் வழியாக சென்னைக்கு, பத்து பஸ்கள் இயக்கப்படுகிறது.
மதுரை, தேனி, நாகர்கோவில், திருநெல்வேலி, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை, சேலம் உள்ளிட்ட பகுதியில் இருந்து திருப்பூருக்கு கூட்டத்துக்கு ஏற்ப சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது.
'பொங்கல் பண்டிகைக்கு சொந்த மாவட்டம் சென்றவர்கள் ஒரே நேரத்தில், சென்ற வேகத்தில் திரும்ப வாய்ப்பு இல்லை; நாளை (ஞாயிற்றுக்கிழமை) தான் அதிகளவில் பயணிகள் திரும்புவர். வரும், 22ம் தேதி வரை தொடர்ந்து வந்து கொண்டிருப்பர்.
எனவே, சிறப்பு பஸ் கூட்டத்துக்கு ஏற்ப பிற ஊர்களில் இருந்து திருப்பூருக்கு இயக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது,' என, திருப்பூர் போக்குவரத்து மண்டல அதிகாரிகள் தெரிவித்தனர்.