UPDATED : மே 07, 2026 06:04 PM
ADDED : மே 07, 2026 06:00 PM
திருப்பூர்: வாரவிடுமுறை நாட்களில் வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, 80 சிறப்பு பஸ்கள் இரு நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சனி, ஞாயிறு விடுமுறையில் திருப்பூரில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, ஒவ்வொரு வாரமும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அவ்வகையில், திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 20, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 30, கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து, 40 என மொத்தம், 90 பஸ்கள் (மே 7) இரவு துவங்கி, ஞாயிற்றுக்கிழமை இரவு வரை இயக்கப்படும். 'தற்போது பள்ளிகள் கோடை விடுமுறை என்பதால், அவ்வப்போது வெளியூர் சென்று திரும்புவோரின் எண்ணிக்கை மாறுவதால், கூடுதல் பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,' என, போக்குவரத்து கழக, திருப்பூர் மண்டல அதிகாரிகள் தெரிவித்தனர்.
