/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆடிப்பெருக்கு பண்டிகை சிறப்பு பஸ்கள் இயக்கம்
/
ஆடிப்பெருக்கு பண்டிகை சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : ஜூலை 13, 2025 12:43 AM
திருப்பூர் : ஆடி மாதம் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் கூட்டம் அதிகரிக்கும். பக்தர்கள் வசதிக்காக, ஆடிஅமாவாசை, ஆடிப்பூரம், ஆடிபெருக்கு நாளில் சிறப்பு பஸ் இயக்குவது குறித்து ஆலோசனையை போக்குவரத்து கழகம் துவக்கியுள்ளது.
ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படுகிறது. இம்மாதம் முழுதும் அம்மன் கோவில்களில் பூச்சாட்டு, பொங்கல், குண்டம், சிறப்பு பூஜை மற்றும் திருவிழாக்கள் நடைபெறும். வரும், 17ல் ஆடி மாதம் பிறக்கிறது. ஜூலை 18, 25, ஆக., 1, 8 மற்றும் 15ம் தேதி என ஐந்து ஆடிவெள்ளிகிழமை. 20ம் தேதி ஆடிக் கிருத்திகை, 24ம் தேதி ஆடி அமாவாசை, 28ம் தேதி ஆடிப்பூரம், 29ம் தேதி நாக பஞ்சமி, ஆக., 3ம் தேதி ஆடிப்பெருக்கு.
மாதத்தில் முதல் 20 நாட்களில், ஆடி மாதத்தின் பெரும்பாலான விேஷங்கள் வருவதால், பக்தர்கள் வசதிக்காக, ஆன்மிக தலங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் ஆலோசித்து வருகிறது. ஆடி அமாவாசை நாளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ராமேஸ்வரம், கொடுமுடி, பவானி, திருச்சி அம்மா மண்டபம் உள்ளிட்ட பகுதிக்கு பஸ், அம்மன் கோவில் களுக்கு பஸ் இயக்கப்பட உள்ளது. ஆடி பெருக்கு நாளில் காவேரி ஆற்றாங்கரையோர பகுதிகளுக்கு கூடுதல் பஸ் இயக்கப்பட உள்ளது.
போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'முந்தைய ஆண்டு சிறப்பு பஸ் இயக்கம், கலெக் ஷன் விபரம் மண்டல, கிளை அளவில் சேகரிக்கப்பட்டு, சிறப்பு பஸ்கள் பட்டியல் தயாராகி வருகிறது. ஓரிரு நாளில் ஆடி மாதம் முழுதும் இயங்க உள்ள பஸ்கள் விபரம் ஒவ்வொரு கோட்ட அளவிலும், மண்டல மேலாளர் வெளியிடுவார்,' என்றனர்.