ADDED : மே 30, 2026 02:59 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூரிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, இன்றும் நாளையும் (சனி மற்றும் ஞாயிறு) அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 75 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கோவில்வழி பஸ் ஸ்டாண்ட்: 30 சிறப்பு பஸ்கள்
மத்திய பஸ் ஸ்டாண்ட்: 20 சிறப்பு பஸ்கள்.
புதிய பஸ் ஸ்டாண்ட்: 25 சிறப்பு பஸ்கள்.
சிறப்பு பஸ்கள் இன்று காலை தொடங்கி, நாளை இரவு வரை தொடர்ந்து இயங்கும்.
வைகாசி பவுர்ணமி என்பதால், கிரிவலம் செல்லும் பக்தர்களுக்காக மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருவண்ணாமலைக்கு 15 சிறப்பு பஸ்களும், திருச்செந்துார் செல்லும் பக்தர்களுக்காக கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து 10 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 25 பஸ்கள் இந்த இரண்டு தினங்களுக்கு மட்டும் பிரத்யேகமாக இயக்கப்பட உள்ளன.
