ADDED : ஜூன் 20, 2026 05:07 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, திருப்பூரிலிருந்து இன்றும், நாளையும் மொத்தம் 135 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இன்று கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து 40, மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து 20, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து 25 என மொத்தம் 85 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாளை கோவில்வழியில் இருந்து 25, மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து 10, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து 15 என மொத்தம் 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை செல்லும் பயணிகளின் வசதிக்காகச் சேலம் மற்றும் விழுப்புரம் வழியாக இரு நாட்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் எனப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
