நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலையில், உணவு பாதுகாப்பு துறை சார்பில், சாலையோர வியாபாரிகளுக்கான பதிவு சான்றிதழ் பெற சிறப்பு முகாம் இன்று நடக்கிறது.
சாலையோர வியாபாரிகளுக்கு, உணவு பாதுகாப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அவ்வகையில், உடுமலையில், உணவு பாதுகாப்புத்துறை சார்பில், இன்று (14ம் தேதி), காலை, 10:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை, கிருஷ்ணா பார்ட்டி ஹாலில், உணவு பாதுகாப்பு சட்டங்கள், உணவு பாதுகாப்பு பயிற்சி, பதிவு சான்றிதழ் பெறுவதற்கான சிறப்பு முகாம் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் நடக்கிறது.

