ADDED : ஜன 09, 2026 06:23 AM
அ நிறம் | அளவு
உடுமலை: மடத்துக்குளம் தொகுதி ஓட்டுச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர், மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
மடத்துக்குளம் சட்டசபை தொகுதி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
மடத்துக்குளம் தொகுதியிலுள்ள, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், நடக்கும் இம்முகாமில், புதிய வாக்காளர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் 6, வாக்காளர் சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்க, பதிவை நீக்க படிவம் 7, முகவரி மாற்றம், வாக்காளர் விபரங்கள் திருத்தம், போட்டோ மாற்றம் மாற்றுத்திறனாளிகள் என குறிப்பிடுவதற்கான விண்ணப்ப படிவம், பாலின திருத்தம் ஆகிய விண்ணப்பங்கள் படிவம் 8 வாயிலாகவும், வழங்கலாம்.
