/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பெற பென்சனர்களுக்காக சிறப்பு முகாம்
/
டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பெற பென்சனர்களுக்காக சிறப்பு முகாம்
டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பெற பென்சனர்களுக்காக சிறப்பு முகாம்
டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பெற பென்சனர்களுக்காக சிறப்பு முகாம்
ADDED : அக் 26, 2025 03:07 AM
திருப்பூர்: மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதியம் பெறுவோர் பயன்பெறும் வகையில், வரும், நவ. 1 முதல் 30 வரை டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சிறப்பு முகாம், ஒரு மாதம் நடத்த தபால் துறை ஆயத்தமாகி வருகிறது.
ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு அரசு மூலம் வழங்கும் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற, தங்கள் விபரங்களை ஒவ்வொரு ஆண்டும் 'அப்டேட்' செய்ய வேண்டும். உரிய துறைகளில் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
வயதானவர்கள், வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் உள்ள வயோதிகர்கள், தேடி அலைந்து தங்கள் ஆயுள் சான்றிதழ் பெறுவது சிரமம் என்பதால், அவர்களுக்கு தபால்துறை உதவி வருகிறது. விண்ணப்பிப்பவர்களுக்கு டிஜிட்டல் முறையில், ஆயுள் சான்றிதழ் வழங்குகிறது. முதியோர் வீடுகளுக்கு சென்றுதபால் ஊழியர் உதவுகின்றனர்.
திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் கூறியதாவது:
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை, 'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ்' வங்கி, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் உள்ளிட்ட துறைகளின் ஒத்துழைப்புடன் நவ. 1 - 30 வரை, முப்பது நாள் சிறப்பு முகாம்கள் நடக்கவுள்ளது. கோட்ட, வட்டார அளவில் தபால் அலுவலர், தபால் ஊழியர்களுக்கான பணிகள் பகிர்ந்து அளிக்கப்படும்.
கடந்த இரு ஆண்டுகளாக நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் ஓய்வூதியதாரர்களுக்கு பயனுள்ளதாக அமைந்ததால், நடப்பாண்டும் முகாம் நடத்த தேவையான ஏற்பாடுகளை துவங்கியுள்ளது.

