/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்
/
திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்
ADDED : ஜூன் 09, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருநங்கைகள், திருநம்பிகளுக்கான முகாம், கலெக்டர் அலுவலக தரை தளத்தில் செயல்படும், மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வரும் 24ம் தேதி, காலை, 10:00 மணி முதல் நடைபெற உள்ளது.
நலவாரிய அடையாள அட்டை, ஆதார் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை, முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டை, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றுக்கு, இம்முகாமில் பதிவு செய்யப்பட உள்ளது என, மாவட்டநிர்வாகம் தெரிவித்துள்ளது.