/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகளிர் தொழில்முனைவோருக்கான சிறப்பு முகாம்: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
/
மகளிர் தொழில்முனைவோருக்கான சிறப்பு முகாம்: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
மகளிர் தொழில்முனைவோருக்கான சிறப்பு முகாம்: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
மகளிர் தொழில்முனைவோருக்கான சிறப்பு முகாம்: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
ADDED : பிப் 12, 2024 11:17 PM
உடுமலை;மாவட்ட அளவில் பெண்களுக்கான தொழில் முனைவோர் சிறப்பு முகாம் 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தின் கீழ் இன்று நடக்கிறது.
ஊரக மகளிரின் தொழில் முனைவுகளை மேம்படுத்தவும், நிதிசேவை, வேலைவாய்ப்பு உருவாக்குதல் மற்றும் பிற தொழில் சேவைகளும், மாநில அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், 5 வட்டாரங்களில் 122 கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
புதிய மற்றும் ஏற்கனவே தொழில் செய்து வரும் தொழில் முனைவோருக்கு தேவையான தொழில் பதிவு, தொழில் திட்டம் தயார் செய்தல், வங்கிக்கடன் பெறுதல் உட்பட அடிப்படை தொழில் சேவைகளை 'மதி சிறகுகள் தொழில் மையம்' வாயிலாக, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் வழங்கி வருகிறது.
இருப்பினும் மார்க்கெட்டிங், பிராண்டிங், பேக்கேஜிங் சந்தை இணைப்புகள், ஏற்றுமதி, இறக்குமதி தர நிலைப்படுத்துதல், தொழில் நுட்பம், இயந்திரமயமாக்கல்,தொழில் சார்ந்த புதுமை யுக்திகள், நிதிசேவைகள்போன்றசேவைகள் பெரும்பான்மையான மகளிர் தொழில் முனைவோருக்கு, குறிப்பாக கிராமப்பகுதியில் உள்ளவர்களுக்கு எளிதில் கிடைப்பதில்லை.
இதுபோன்ற பல்வேறு சேவைகளை ஒரே நிலையத்தில் பெற, தகுதியான மகளிர் தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்யும் முகாம் இன்று மாவட்ட நிர்வாக அலுவலக அரங்கில் நடக்கிறது.
புதிய தொழில் நிறுவனங்களை துவக்கும் ஆர்வமும், யுக்தியும், திறமையும் கொண்ட புதிய மகளிர் தொழில் முனைவோர்களும், ஏற்கனவே தொழில் நிறுவனங்களை துவக்கி வெற்றிகரமாக நடத்தி அடுத்தகட்ட வளர்ச்சியை எதிர்நோக்கி காத்திருக்கும் மகளிர் தொழில் முனைவோர்களும், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.