ADDED : பிப் 13, 2026 05:22 AM

உடுமலை: உடுமலையில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில், 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
உடுமலையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் இந்திய செயற்கைக்கால் உற்பத்தி கழகம் (அலிம்கோ) சார்பில், தேஜஸ் மகாலில் மாற்றுத்திறனாளிகளுக்கான, சிறப்பு மதிப்பீட்டு முகாம் நடந்தது.
உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து, 250க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு, மருத்துவ நிபுணர்கள், உடல் நிலை மதிப்பீடு செய்து, தேவையான உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான பரிந்துரைகளை செய்தனர்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை பதிவு செய்யும் பணியும், அவர்களுக்கு உடனடி வழிகாட்டுதலும் உதவியும் வழங்கப்பட்டது.
மேலும், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் அரசு நலத்திட்டங்கள் பெறுவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
