/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.எம்., கிசான் திட்டத்தில் பயன்பெற சிறப்பு முகாம் வரும் 31ம் தேதி வரை நடக்கிறது
/
பி.எம்., கிசான் திட்டத்தில் பயன்பெற சிறப்பு முகாம் வரும் 31ம் தேதி வரை நடக்கிறது
பி.எம்., கிசான் திட்டத்தில் பயன்பெற சிறப்பு முகாம் வரும் 31ம் தேதி வரை நடக்கிறது
பி.எம்., கிசான் திட்டத்தில் பயன்பெற சிறப்பு முகாம் வரும் 31ம் தேதி வரை நடக்கிறது
ADDED : மே 17, 2025 04:20 AM
உடுமலை : மத்திய அரசு சார்பில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிசான் சம்மான் நிதி உதவி திட்டத்தின் கீழ், உதவித்தொகை பெறும் விவசாயிகள், ஆவணங்கள் புதுப்பித்தல் மற்றும் புதிதாக இணையும் வகையில், வரும், 31ம் தேதி வரை வேளாண் விரிவாக்க மையங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
மத்திய அரசின், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, மூன்று தவணைகளாக, ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் தங்களது, 20-வது தவணை தொகை பெறுவதற்கு, ஆதார் எண்ணுடன் வங்கிக்கணக்கினை இணைத்தல், இ-கே.ஒய்.சி., மற்றும் நில ஆவணங்களை இணைத்தல் போன்ற பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
வங்கிக்கணக்கை, ஆதார் எண்ணுடன் இணைக்க முடியாத விவசாயிகள், வங்கி தொடர்பான பிரச்னை உள்ள விவசாயிகள், தங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று, புதிய சேமிப்புக்கணக்கினை தொடங்கி பயன் பெறலாம்.
கிராம தபால் நிலையங்களில் வழங்கப்பட்டுள்ள மொபைல் எண் மற்றும் பயோ மெட்ரிக் கருவி வாயிலாக, ஆதார், மொபைல்எண் பதிவு செய்து, ஜீரோ இருப்பு கணக்கினை விவசாயிகளுக்கு உடனடியாக தொடங்கும் வகையிலும், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கிழ் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில், சிறப்பு முகாம்கள், அனைத்து ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், வரும், 31ம் தேதி வரை நடக்கிறது.
விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள், பொது இ--சேவை மையங்கள் மற்றும் இந்திய அஞ்சல் கட்டண வங்கியினையும் அணுகி, திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ், இதுவரை சேர்ந்து பயனடையாத விடுபட்ட தகுதியுடைய விவசாயிகளுக்கும், ஏற்கனவே பதிவு செய்து பயன்பெற்று பல்வேறு காரணங்களால் தற்போது நிதியுதவி நிறுத்தப்பட்ட பயனாளிகளும், இம்முகாமிற்கு வந்து பயன்பெறலாம்.
மேலும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வந்த விவசாயி மரணமடைந்திருந்தால், அவர்களது தகுதியுடைய வாரிசு, உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து தங்களது பெயருக்கு இத்திட்டத்தின் கீழ் புதிதாக பதிவு செய்து பயனடையலாம்.
இறந்த பயனாளிகளின் விபரங்களை சமர்ப்பிக்காமல், இறந்த பிறகும் தவணைத்தொகை பெறப்பட்டு வருவது, ஆய்வில் தெரியவந்தால் தவறுதலாக பெறப்பட்ட தொகை வாரிசுதாரரிடமிருந்து வசூலிக்கப்படும்.
எனவே இறந்த பயனாளிகளின் இறப்புச்சான்றிதழ்களை சமர்ப்பித்து, அவர் பெற்று வரும் நிதியினை நிறுத்தவும், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து வாரிசு பெயரில் மாறுதல் செய்யவும் வேண்டும், என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.