ADDED : செப் 08, 2026 07:02 PM
உடுமலை: திருப்பூர் மாவட்டத்தில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண, அக். 1 முதல் டிச. 31 வரை சிறப்பு சமரச தீர்வு முகாம் நடைபெற உள்ளது.
ஆக. 1 முதல் செப். 30 வரை, சமரசத்துக்கு பரிந்துரைக்கப்படும் உரிமையியல், குடும்பத் தகராறு, வாகன விபத்து இழப்பீடு, குடும்ப வன்முறை, காசோலை மோசடி, வணிகக் கடன் உள்ளிட்ட வழக்குகள் முகாமில் விசாரிக்கப்படும்.
திருப்பூர் மாவட்ட சமரச மையத்திலும், அவிநாசி, காங்கயம், தாராபுரம், பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், ஊத்துக்குளி நீதிமன்ற வளாகங்களில் செயல்படும் துணை மையங்களிலும் வழக்குகளை நேரடியாகவோ, வக்கீல் வாயிலாகவோ பரிந்துரைக்கலாம்.
சமரசர்கள் வாயிலாக, சுமுகத் தீர்வு காணப்படும்; வழக்குச் சுமையும் கால விரயமும் தவிர்க்கப்படும் என்று மாவட்ட சமரச மைய ஒருங்கிணைப்பாளர் நீதிபதி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
