தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பிரத்யேக சரக்கு ரயில் இயக்கம்

 பிரத்யேக சரக்கு ரயில் இயக்கம்

 பிரத்யேக சரக்கு ரயில் இயக்கம்


ADDED : நவ 30, 2025 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 06:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பயணிகள் ரயில்களை இயக்குவது போல், கூடுதல் பெட்டிகளுடன் சரக்கு ரயிலை இயக்கினால், வருவாய் பெருகும் என ஆலோசித்த ரயில்வே தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே பிரத்யேக சரக்கு சிறப்பு ரயிலை இயக்குகிறது. அவ்வகையில், வரும், டிச. 12ம் தேதி, கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து சென்னைக்கு (ராயபுரம்) பிரத்யேக சரக்கு ரயிலை இயக்குகிறது.

கண்ணுார், கோழிக்கோடு, பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட, 12 ஸ்டேஷன்களில் இந்த சரக்கு ரயில் நின்று செல்ல உள்ளது. ஆடைகள், மோட்டார் உதிரி பாகங்கள், ஸ்டீல் பொருட்கள், மீன்கள் உள்ளிட்ட ரயில்வே ஒப்புதல் வழங்கும் பொருட்களை பார்சல் முன்பதிவு செய்யலாம்.

ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு குறிப்பிட்ட ரயில் நிலையங்களுக்கான பார்சல்களை ஏற்றுவதற்கு தனியிடம் ஒதுக்கப்பட உள்ளது. ஒரு பெட்டியில், 23 டன் வரை ஏற்ற முடியும். 12 பெட்டிகளில், 240 டன் சரக்குகளை கொண்டு செல்ல முடியும். டிச., 12ல் துவங்கும் பயணம், 13ல் சென்னையில் நிறைவு பெறும்; மறுமார்க்கமாக, 16ம் தேதி சென்னையில் இருந்து ரயில் மங்களூரு புறப்படும். இந்த ரயிலுக்கான பார்சல் முன்பதிவு குறித்த விபரங்கள் ஓரிரு நாளில் விரிவாக அறிவிக்கப்படும் என சேலம் கோட்ட வணிகப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னலாடை துறை வரவேற்பு திருப்பூரில் இருந்து சென்னை துறைமுகம் வாயிலாக பனியன் பார்சல்கள், செகண்ட்ஸ் ஆடைகள் செல்கின்றன. திருவனந்தபுரம், மங்களூரு, பெங்களூருக்கும் அனுப்பப்படுகின்றன. சூப்பர்பாஸ்ட், எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒரு பெட்டியில் பாதியளவுக்கு லக்கேஜ் ஏற்ற ஒதுக்கினாலும், ரயில்கள் கேரளாவில் இருந்து வரும் போது, பார்சலுக்கு இடம் கிடைப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் எழுகிறது. குறித்த நேரத்துக்குள் சரக்குகள் சென்று சேர்வதில்லை. முதலில் முன்பதிவு முன்னுரிமை என்ற அடிப்படையில் சரக்குகள் அனுப்பி வைப்பதால், குறிப்பிட்ட ரயிலில் சரக்குகளை அனுப்பி வைக்காமல், அடுத்தடுத்து வரும் ரயில்களுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பிரத்யேக சரக்கு ரயில் இயக்கி, திருப்பூருக்கென தனி பெட்டி (23 டன்) ஒதுக்கினால், கூடுதலாக சரக்குகளை முன்பதிவு செய்து அனுப்ப வசதியாக இருக்கும். இதனால் பிரத்யேக சரக்கு ரயில் இயக்கத்துக்கு பின்னலாடை உற்பத்தியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us