/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயர்கல்வி பெறுவதற்கான சிறப்பு குறைதீர் கூட்டம்
/
உயர்கல்வி பெறுவதற்கான சிறப்பு குறைதீர் கூட்டம்
ADDED : ஜூன் 16, 2025 09:16 PM
உடுமலை; பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், திருப்பூரில் இன்று நடக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் உயர்கல்விக்கான வழிகாட்டுதல் பெறுவதற்கும், சேர்க்கையில் உள்ள சிக்கல்களுக்கான உதவி பெறுவதற்கும் சிறப்பு குறைதீர் கூட்டம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று நடக்கிறது.
இக்கூட்டம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலை, 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.
பிளஸ் 2 வகுப்பில் பல்வேறு காரணங்களால் உயர்கல்விக்கு செல்ல முடியாத மாணவர்கள், சான்றிதழ் தேவையுடையவர்கள், கல்விக்கடன் பெறுவது, உயர்கல்விக்கான வழிகாட்டல் பெறுவதற்கும், மாணவர்கள் இந்த குறைதீர் கூட்டத்தில் பங்கேற்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.