/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளி மாணவருக்கு சிறப்பு மருத்துவ முகாம்
/
மாற்றுத்திறனாளி மாணவருக்கு சிறப்பு மருத்துவ முகாம்
மாற்றுத்திறனாளி மாணவருக்கு சிறப்பு மருத்துவ முகாம்
மாற்றுத்திறனாளி மாணவருக்கு சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : டிச 13, 2025 07:15 AM

பல்லடம்: மேற்கு பல்லடம் அரசு துவக்கப்பள்ளியில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் கவிதாமணி தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார்.
மாவட்ட உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுந்தரி, கரோலின், வட்டார கல்வி அலுவலர்கள் முஷரப் பேகம், விஸ்வநாதன், பல்லடம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அங்கையற்கண்ணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில், மனநலம், கண், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை தொடர்பான சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்றனர். மொத்தம், 110 மாற்றுத்திறனாளி மாணவர்கள் முகாமில் பங்கேற்றனர்.
இதில், 7 பேருக்கு புதிதாக மாற்றுத்திறனாளி அட்டைகள் வழங்கப்பட்டன. 75 பேருக்கு ரயில் மற்றும் பஸ் பாஸ் வழங்கப்பட்டது. முகாமில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.

