தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/துாய்மை கிராமங்களை உருவாக்க சிறப்பு திட்டம்!வரும் 31ல் நடக்கிறது கிராம சபை

துாய்மை கிராமங்களை உருவாக்க சிறப்பு திட்டம்!வரும் 31ல் நடக்கிறது கிராம சபை

துாய்மை கிராமங்களை உருவாக்க சிறப்பு திட்டம்!வரும் 31ல் நடக்கிறது கிராம சபை


UPDATED : ஜூலை 26, 2026 05:21 PM

ADDED : ஜூலை 26, 2026 04:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2026 05:21 PM ADDED : ஜூலை 26, 2026 04:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை: ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முழுமையாக செயல்படுத்தும் வகையில், துாய்மை கிராமங்கள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஊராட்சிகளிலும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 265 கிராம ஊராட்சிகளிலும் 'திருப்பூரின் நல் திருப்பம் -தூய்மை கிராமங்கள்' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ், மாதிரி அடிப்படையில், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கு, தலா இரண்டு கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சிகளாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், உடுமலை ஒன்றியத்தில், ஜிலேபிநாயக்கன்பாளையம், குறிஞ்சேரி ஊராட்சிகளும், குடிமங்கலம் ஒன்றியத்தில், ஆமந்தகடவு, மூங்கில்தொழுவு ஊராட்சிகளும், மடத்துக்குளம் ஒன்றியத்தில், பாப்பான்குளம், சோழமாதேவி ஊராட்சிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு, பொதுமக்கள் கருத்துக்கேட்பு மற்றும் கலந்தாய்வு விழிப்புணர்வு சிறப்பு கிராம சபை கூட்டம், தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில், வரும், 31ம் தேதி நடக்கிறது.

இத்திட்டத்தின் கீழ், நமது ஊரின் குப்பையை நமது ஊரிலேயே உரமாக்குவோம், என்ற அடிப்படையில், வீடு வீடாக சென்று மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து பெறப்படும்.

மாடுகள் வளர்க்கும் வீடுகளில், அவர்கள் வீடுகளிலேயே ஈர மற்றும் காய்கறிக்கழிவுகளை உரமாக்கிக் கொள்ளும் 'வீட்டு உரக்குழி' முறை, தோட்டத்தில் மாடு வளர்ப்போருக்கு 'தோட்ட உரக்குழி' முறை, மேற்கண்ட இரு வசதிகளும் இல்லாவர்கள், வீட்டுக் கழிவுகளை கிராம ஊராட்சிகள் வாயிலாக, பொது உரக்குழி அமைத்து, உரமாக்கி அந்த ஊர் மண்ணிலேயே அந்த உரம் பயன்படுத்தப்பட உள்ளது.

எனவே, திடக்கழிவு மேலாண்மை விதி 2026ன் கீழ், கிராம மக்கள் ஈரக்கழிவுகளான, சமைத்த உணவு, மீதமாகும் உணவு, காய்கறி மற்றும் பழக்கழிவுகள், முட்டை ஓடு, தேங்காய் சிரட்டை, தேங்காய் நார், டீத்தூள், காபி தூள், மீன் கழிவுகள், இறைச்சி கழிவுகள், இலைகள், பூக்கள், செடிகள், சிறிய கிளைகள், கரும்பு சக்கை ஆகியவற்றை தனியாக பிரித்து வழங்க வேண்டும்.

அதே போல், உலர் கழிவுகளாக, நாளிதழ்கள், புத்தகங்கள், அட்டைப்பெட்டிகள், கார்ட்போர்டு, தண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள், எண்ணெய் பாட்டில்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், பிளாஸ்டிக் நாற்காலிகள், கண்ணாடி பாட்டில்கள், டின் டப்பாக்கள், அலுமினிய டின்கள், ஸ்டீல் பாத்திரங்கள், இரும்புப் பொருட்கள், பித்தளைப் பொருட்கள் ஆகியவற்றை தனியாக வழங்க வேண்டும்.

சுகாதார கழிவுகளான, பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின்கள், டயப்பர்கள் மற்றும் பிற தனிநபர் சுகாதாரக் கழிவுகளை தனியாக பிரித்து வழங்க வேண்டும்.

சிறப்பு கவன கழிவுகளான, பேட்டரிகள், மொபைல் பேட்டரிகள், இயர்போன்கள், கேபிள்கள், காலாவதியான மருந்துகள், மாத்திரைகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள் மற்றும் மருத்துவக் கழிவுகள், பூச்சிக்கொல்லி பாட்டில்கள், ரசாயன பாட்டில்கள், பல்புகள், டியூப் லைட்கள் ஆகியவற்றை தனியாக பிரித்து வழங்க வேண்டும்.

எனவே, ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள், தூய்மைக்காவலர்களிடம் குப்பையை தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும். இதர மக்காத குப்பைகளையும் பிரித்து வழங்கவும், பயன்படுத்தப்பட்ட நாப்கீன், டயப்பர் போன்றவற்றை தனியாக வழங்கவும் அறிவுறுத்தப்படுகிறது. சுத்தமான தூய்மை கிராமங்களை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும், என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us