/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரத்யேக பார்சல் ரயில் 12ம் தேதி இயக்கம்
/
பிரத்யேக பார்சல் ரயில் 12ம் தேதி இயக்கம்
ADDED : டிச 09, 2025 08:02 AM
திருப்பூர் : மங்களூரு - சென்னை இடையே இயக்கப்பட உள்ள பிரத்யேக பார்சல் ரயிலில், திருப்பூரில் இருந்து ஆடைகள் உள்ளிட்டவற்றை அனுப்ப முடியும்.
பயணிகள் ரயில்களை இயக்குவது போல், கூடுதல் பெட்டிகளுடன் பிரத்யேக பார்சல் ரயிலை இயக்க ரயில்வே முன்வந்துள்ளது. முதல்கட்டமாக, மங்களூரு - சென்னை (ராயபுரம்) இடையே, 12 பெட்டிகளுடன் சிறப்பு ரயில் வரும், 12ம் தேதி இயங்க உள்ளது. மதியம், 3:10 மணிக்கு மங்களூருவில் புறப்படும் ரயில், மறுநாள் (13ம் தேதி) அதிகாலை 3:45 மணிக்கு திருப்பூர் வரும். ஐந்து நிமிடங்கள் நிற்கும். மதியம், 1:30 மணிக்கு சென்னை (ராயபுரம்) சென்று சேரும்.
ரயிலில், ஆடைகள், மோட்டார் உதிரி பாகங்கள், ஸ்டீல் பொருட்கள், மீன்கள் உள்ளிட்ட ரயில்வே ஒப்புதல் வழங்கும் பொருட்களை அனுப்பலாம். அதற்காக முன்பதிவு செய்யலாம். ஒரு பெட்டியில், 23 டன் வரை ஏற்ற முடியும். 12 பெட்டிகளில், 276 டன் சரக்குகளை கொண்டு செல்ல முடியும். திருப்பூரில் இருந்து ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, சென்னைக்கு பார்சல் முன்பதிவு செய்யலாம். வாடிக்கையாளர் ஒருவர் பத்து கிலோ முதல் மூன்று டன் வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இடநெருக்கடியை தவிர்க்க முன்கூட்டியே முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.
கட்டணம் குறைவு திருப்பூரில் இருந்து சென்னைக்கு கிலோவுக்கு, மூன்று ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், பிரத்யேக பார்சல் ரயிலில் அதை விட குறைவாக 1.50 - 2 ரூபாய் தான் கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது. பார்சல் முன்பதிவு செய்ய விரும்புவோர், ரயில்வே ஸ்டேஷனில் உள்ள பார்சல் புக்கிங் ஆபீஸ்ஸை தொடர்பு கொள்ளலாம். விவரங்களுக்கு 73389 49690 என்ற எண்ணில் அழைக்கலாம். - ரயில்வே ஸ்டேஷன் வணிகப்பிரிவு அதிகாரிகள்.

