ADDED : அக் 28, 2024 11:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : செல்லப்பம்பாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், வாஸ்து தினத்தையொட்டி, சிறப்பு அபிேஷக பூஜைகள் நடந்தது.
உடுமலை அருகே செல்லப்பம்பாளையத்தில், ஆதிகேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், தனிச்சன்னதியில், வாஸ்து பகவான் அருள்பாலித்து வருகிறார். நேற்று வாஸ்து தினத்தையொட்டி, வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.