ADDED : அக் 01, 2025 12:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடந்தது.
தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், விவசாய தொழிலாளர்களின் முன்னோடி தலைவர் சீனிவாசராவ் நினைவாக, 'அதிகரிக்கும் ஆணவப்படுகொலைகள் - நிரந்தர தீர்வு என்ன? என்ற சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடந்தது.
ஊத்துக்குளி ரோடு, ஏ.ஐ.டி.யு.சி., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இ.கம்யூ., மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் லெனின், ரவி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் மலையாண்டி, கோபால், பூங்கொடி உட்பட பலர் பேசினர்.