/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொடர் விசேஷம் - பள்ளிகள் திறப்பு கூடுதல் பஸ் இயக்க ஆலோசனை
/
தொடர் விசேஷம் - பள்ளிகள் திறப்பு கூடுதல் பஸ் இயக்க ஆலோசனை
தொடர் விசேஷம் - பள்ளிகள் திறப்பு கூடுதல் பஸ் இயக்க ஆலோசனை
தொடர் விசேஷம் - பள்ளிகள் திறப்பு கூடுதல் பஸ் இயக்க ஆலோசனை
ADDED : மே 24, 2025 11:16 PM
திருப்பூர்: நாளை அமாவாசை, வரும், 28ம் தேதி முகூர்த்த தினம், ஜூன், 2ல் பள்ளிகள் திறப்பு என்பதால், மாநிலம் முழுதும் கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் தயாராகி வருகிறது. சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும், அனைத்து கோட்டங்களில் இருந்து அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் கூடுதல் பஸ்கள் இயக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஏப்., 24ல் துவங்கிய கோடை விடுமுறை, மே, 31ம் தேதியுடன், நிறைவடைய உள்ளது. ஜூன், 2ம் தேதி பள்ளிகள் திறப்பதை பள்ளி கல்வித்துறை உறுதி செய்துள்ளது. சொந்த மாவட்டங்களுக்கு சென்ற பலர் மீண்டும் தங்கள் கல்வி நிறுவனங்கள் உள்ள, வசிப்பிடங்களுக்கு திரும்ப தயாராகி வருகின்றனர். வரும், 30, 31 மற்றும், ஜூன், 1ம் தேதி அரசு பஸ்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும், அனைத்து கோட்டங்களில் இருந்து அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் ஆலோசித்துள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'நாளை (26ம் தேதி) சித்திரை அமாவாசை, வரும், 28ம் தேதி வைகாசி வளர்பிறை முகூர்த்தம். இரு நாட்களும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
ஜூன், 2ல் பள்ளிகள் திறப்பு என்பதால், அதற்கு முந்தைய தினங்களில் கூடுதல் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மே, 30 மற்றும் 31ம் தேதி இரு நாட்கள் தங்கள் வசிக்கும் மாவட்டங்களுக்கு பெரும்பாலானோர் திரும்புவார்கள். அதற்கேற்ப ஒவ்வொரு கோட்டம், கிளையில் இருந்து கூடுதல் பஸ் இயக்கப்பட உள்ளது,' என்றனர்.