/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்றும் - நாளையும் சிறப்பு ரயில் இயக்கம்
/
இன்றும் - நாளையும் சிறப்பு ரயில் இயக்கம்
ADDED : ஏப் 11, 2025 11:36 PM
திருப்பூர்; தமிழ்ப்புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, பயணிகள் கூட்டத்தை சமாளிக்க, இன்றும், நாளையும் சிறப்பு ரயில் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு - எர்ணாகுளம் ரயில் (எண்:06575) இன்று மாலை, 4:35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம், 3:00 மணிக்கு சென்று சேரும். திருப்பூருக்கு இன்று இரவு, 11:10 மணிக்கு வரும்.
மறுமார்க்கமாக, வரும், 14ம் தேதி இரவு, 10:00 மணிக்கு எர்ணாகுளத்தில் சிறப்பு ரயில் (எண்:06576) புறப்பட்டு, மறுநாள் காலை, 10:55 மணிக்கு பெங்களூரு சென்று சேரும். வரும், 15ம் தேதி அதிகாலை, 3:15 மணிக்கு திருப்பூரை கடந்து செல்லும். சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் (எண்:06113) இன்றும், வரும், 19ம் தேதி இயங்கும். சென்னையில் இரவு, 11:20 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் மதியம், 3:30 மணிக்கு கொல்லம் வந்தடையும். திருப்பூருக்கு, காலை, 6:10 மணிக்கு வரும்.
மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வரும், 13 மற்றும், 20ம் தேதி இரவு, 7:10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06114) மறுநாள் காலை, 11:10 மணிக்கு சென்னை சென்று சேரும். திருப்பூரை அதிகாலை, 3:15 மணிக்கு கடந்து செல்லும்.