/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவை - திருப்பூர் வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில்
/
கோவை - திருப்பூர் வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில்
கோவை - திருப்பூர் வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில்
கோவை - திருப்பூர் வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில்
ADDED : அக் 26, 2024 06:42 AM
திருப்பூர்: பெங்களூருக்கு தீபாவளி சிறப்பு ரயிலாக, முன்பதிவில்லா பெட்டிகளுடனான, 'அந்தியோதயா' ரயில் அறிவிக்கப்பட்டுள்ளதால், மேற்கு மண்டல ரயில் பயணியர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை - திருப்பூர் வழியாக பெங்களூருக்கு போதிய ரயில்கள் இல்லை. பெங்களூருக்கு முன்பதிவு டிக்கெட் கிடைப்பது பெரும் சவாலாக இருப்பதாக, மேற்கு மண்டல பயணியர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதற்கிடையே, நவ., 4ம் தேதி, கொச்சுவேலியில் இருந்து பெங்களூருக்கு 'அந்தியோதயா ரயில்' தீபாவளி சிறப்பு ரயிலாக இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாலை, 6:05க்கு கொச்சுவேலியில் புறப்படும் ரயில், பாலக்காடு வழியாக வந்து, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஸ்டேஷன்களில் நின்று, மறுநாள் காலை, 10:55க்கு பெங்களூரு சென்றடையும்.
மறுமார்க்கமாக பெங்களூரு - கொச்சுவேலி ரயில் நவ., 5 மதியம்,12:45 க்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 5:00 மணிக்கு கொச்சுவேலி செல்லும். முன்பதிவில்லா, 14 பொது பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில், தீபாவளி முடிந்து, பெங்களூரு செல்லும் பயணியருக்கு உதவியாக இருக்கும்.