/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகராட்சி, பேரூராட்சிகளில் சிறப்பு வார்டு கூட்டம்
/
நகராட்சி, பேரூராட்சிகளில் சிறப்பு வார்டு கூட்டம்
ADDED : அக் 24, 2025 11:52 PM
உடுமலை: உடுமலை நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சிறப்பு வார்டு கூட்டங்கள் நடக்கிறது.
உடுமலை நகராட்சி மற்றும் மடத்துக்குளம், குமரலிங்கம், சங்கராமநல்லுார், கணியூர், தளி ஆகிய பேரூராட்சிகளிலுள்ள அனைத்து வார்டுகளிலும், வார்டு கவுன்சிலர் தலைமையில், அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம், வரும், 27, 28, 29 ஆகிய நாட்களில் சிறப்பு வார்டு கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த சிறப்பு வார்டு கூட்டத்தில், பொதுமக்கள் தங்களது வார்டு பகுதியில், அடிப்படை தேவைகளான குடிநீர் வினியோகம், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலை பழுதுகள், பூங்காக்கள் பராமரிப்பு மற்றும் மழை நீர் வடிகால் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து புகார்களை தெரிவிக்கலாம்.
ஒவ்வொரு வார்டுகளிலும், பிரதான மூன்று கோரிக்கைகள், அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உடனடியாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே தங்கள் வார்டுகளிலுள்ள பிரச்னைகள் குறித்து பொதுமக்கள், குடியிருப்போர் நல சங்க பிரதிநிதிகள், இக்கூட்டங்களில் பங்கேற்று தெரிவிக்கலாம், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

