ADDED : பிப் 12, 2024 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் சுமதி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, வட்டார வள மையம் மேற்பார்வையாளர் சுரேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் வரவேற்றார்.
நகராட்சி தலைவர் குமார், துணைத்தலைவர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஈஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாஸ்கர சேதுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

