/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பேச்சு - கட்டுரை போட்டி: மாணவர்கள் அசத்தல்
/
பேச்சு - கட்டுரை போட்டி: மாணவர்கள் அசத்தல்
ADDED : ஜூலை 12, 2025 12:45 AM

திருப்பூர்; கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில், மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்த மாணவியர் பிருந்தா, பூர்ணவர்தனி ஆகியோர், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி, திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் இளங்கோ துவக்கிவைத்தார்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசு, தனியார் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கட்டுரைப்போட்டியில் 95 பேரும்; பேச்சுப்போட்டியில் 110 பேரும் பங்கேற்று, தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். நடுவர் குழுவினர் மதிப்பெண் வழங்கினர்.
பேச்சுப்போட்டியில், திருப்பூர் - காங்கயம் ரோடு செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி மாணவி பிருந்தா முதலிடம்; உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சஜினா பர்வீன் இரண்டாமிடம் 15 வேலம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஸ்ரீதன்யா மூன்றாமிடம் பிடித்தனர்.
கட்டுரைப்போட்டியில், 15 வேலம்பாளையம் ஜெய்சாரதா மெட்ரிக் பள்ளி பூர்ண வர்தனி முதலிடம்; காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி ஜமுனா இரண்டாமிடம்; உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் பள்ளி ஷிபியா சு.ஷாஷானா மூன்றாமிடம் பிடித்தனர்.
மாவட்ட அளவிலான பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு, பத்தாயிரம் ரூபாய்; இரண்டாமிடம் பிடித்தவர்களுக்கு, 7 ஆயிரம்; மூன்றாமிடத்துக்கு, ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது. பேச்சுப்போட்டியில் முதலிடம் பிடித்த செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி மாணவி பிருந்தா மற்றும் கட்டுரைப்போட்டியில் முதலிடம் பிடித்த ஜெய்சாரதா மெட்ரிக் பள்ளி மாணவி பூர்ணவர்தனி ஆகிய இருவரும், வரும் 15ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.