/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி மாணவர்களுக்கு 10ம் தேதி பேச்சுப்போட்டி
/
பள்ளி மாணவர்களுக்கு 10ம் தேதி பேச்சுப்போட்டி
ADDED : ஜூலை 02, 2025 11:56 PM
திருப்பூர்; தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், 'தமிழ்நாடு நாள்' இலக்கிய போட்டிகள், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வரும் 10ம் தேதி நடைபெற உள்ளன.
ஆறு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்படுகிறது. போட்டிகள், காலை, 10:00 மணி முதல் துவங்கி நடைபெறும். முதல் கட்டமாக பள்ளி அளவில் போட்டி நடத்தப்பட்டு, சிறந்த மாணவர்களை மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்கச் செய்யவேண்டும்.
திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது ddtamil607@gmail.com என்கிற முகவரிக்கு இ-மெயிலில், போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
ஆட்சி மொழி வரலாற்றில் கீ.ராமலிங்கம், பன்மொழிப்புலவர் கா. அப்பாதுரையாரின் தமிழ் ஆட்சிச் சொல் பணி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும்.
பேச்சுப்போட்டிக்கு, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, அன்னைத்தமிழே ஆட்சிமொழி; தொன்று தொட்டு தமிழ்நாடு எனும் பெயர்; அண்ணா கண்ட தமிழ்நாடு; ஆட்சி மொழி விளக்கம்; தமிழ்நாடு என பெயர் சூட்டிய நிகழ்வு; ஆட்சி மொழி - சங்க காலம் தொட்டு; இக்காலத்தில் ஆட்சி மொழி ஆகிய தலைப்புகளில் தயாராக வேண்டும் தமிழ் வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது.