/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
/
பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
ADDED : ஜூலை 01, 2025 10:24 PM
உடுமலை; காமராஜர் பிறந்தநாளையொட்டி, பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி வரும் 5ம் தேதி நடக்கிறது.
விருதுநகரைச்சேர்ந்த என்.எம்.எஸ்., அமைப்பின் சார்பில், காமராஜர் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
நடப்பாண்டில், திருப்பூர் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லுாரியில் ஜூலை 5ம் தேதி நடக்கிறது.
இப்போட்டியில் 6 முதல் பிளஸ் 2வரை உள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரொக்கத்தொகையும் பரிசாக வழங்கப்படுகிறது.
போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள், 87782 01926, 98422 24802 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.