ADDED : ஜன 19, 2026 06:28 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் - ரயில்வே மேம்பாலம் -டவுன்ஹால் சந்திக்கும் நால்ரோடு, ரவுண்டானா பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது.
ரயில்வே மேம்பாலத்தில் இருந்து பஸ் ஸ்டாப்புக்கு வரும் வாகனங்கள் வேகத்தை வேகத்தடை கட்டுப்படுத்தியது.
திருப்பூருக்கு வி.வி.ஐ.பி.க்கள் வருகையின் போது, இந்தவேகத்தடை அகற்றப்பட்டது; மீண்டும் நிறுவவில்லை.
மூன்று திசைகளில் இருந்த வேகத்தடையும் அகற்றப்பட்டதால், வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
அவ்வப்போது, சிறுசிறு விபத்து நடந்து வருகிறது; பெரிய விபத்து ஏற்படும் முன் வேகத்தடை அமைக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கை.
