/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விளையாட்டு போட்டி அட்டவணை வெளியீடு
/
விளையாட்டு போட்டி அட்டவணை வெளியீடு
ADDED : அக் 30, 2025 11:46 PM
திருப்பூர்:  பள்ளி கல்வித்துறை, திருப்பூர் மாவட்டம் சார்பில், மாவட்ட விளையாட்டு போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நவ. 4ம் தேதி, ஜெய்வாபாய் பள்ளியில் மாவட்ட மாணவர் பிரிவு குத்துச்சண்டை; 5ம் தேதி, மாவட்ட மாணவியர் குத்துச்சண்டை போட்டி நடக்கிறது; வரும், 6 ம் தேதி உடுமலை குறிச்சிக்கோட்டை, ஆர்.வி.ஜி., மெட்ரிக் பள்ளியில் மாணவியர் ஹாக்கி; எஸ்.கே.பி., மெட்ரிக் பள்ளியில், மாணவியர் ஹேண்ட்பால்; கே.செட்டிபாளையம், விவேகானந்தா மெட்ரிக்கில், மாணவியர் 19 வயது கால்பந்து; நஞ்ச ப்பா பள்ளியில் மாணவர், 19 வயது கால்பந்து; அலகுமலை வித்யாலயாவில் மாணவியர் கபடி போட்டி நடக்கிறது.
நவ. 7ம் தேதி, உடுமலை ஆர்.வி.ஜி., மெட்ரிக் பள்ளியில், மாணவர் ஹாக்கி; எஸ்.கே.பி., மெட்ரிக் பள்ளியில் மாணவர் ேஹண்ட்பால்; ஏ.கே.ஆர்., அகாடமியில், மாணவர் கோ கோ; உடுமலை வித்யாசாகர் பள்ளியில் மாணவியர் த்ரோபால் போட்டி நடக்கிறது.
இதே நாளில், கே.செட்டிபாளையம், விவேகானந்தா வித்யாலயாவில், மாணவியர் 17 வயது கால்பந்து; நஞ்சப்பா பள்ளியில் மாணவர், 17 வயது பிரிவு கால்பந்து; அலகுமலை வித்யாலயாவில் மாணவர் கபடி போட்டி நடக்கிறது.
நவ. 8ல் வித்யாசாகர் பள்ளியில் மாணவியர் த்ரோபால்; ஏ.கே.ஆர்., அகாடமியில், மாணவியர் கோ கோ; விவேகானந்தா வித்யாலயாவில், மாணவியர் 14 வயது கால்பந்து; நஞ்சப்பா பள்ளியில் மாணவர், 14 வயது கால்பந்து போட்டிகள் நடக்கிறது.

