/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள்
/
பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள்
ADDED : டிச 16, 2024 12:27 AM
பொங்கலுார் ஒன்றியம், மருதுரையான் வலசு அரசு நடுநிலைப் பள்ளியில், கண்டியன்கோவில் கிராம ஊராட்சிக்குட்பட்ட துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணி தலைமை வகித்தார். பி.டி.ஓ., பூங்கொடி, சியாமளா ஆகியோர் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு ஊராட்சி தலைவர் கோபால் பரிசு வழங்கினார். பள்ளிக்கு, 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டித் தந்த பாப்பீஸ் நிறுவனத்திற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முன்னாள் தலைமை ஆசிரியர் பழனிசாமி, ஊராட்சி துணைத் தலைவர் மூர்த்தி, பி.ஏ.பி., பாசன சபை தலைவர் பாலசுப்ரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

