/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளியில் விளையாட்டு விழா; மாணவர்கள் அசத்தல்
/
பள்ளியில் விளையாட்டு விழா; மாணவர்கள் அசத்தல்
ADDED : நவ 27, 2024 09:23 PM

உடுமலை; கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா பள்ளியில் 'பன்பிட்' விளையாட்டு விழா நடந்தது.
கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா பள்ளியில் நடந்த 'பன்பிட்' விளையாட்டு விழாவில் மாணவி சஹானா வரவேற்றார். வித்யநேத்ரா மெட்ரிக் பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன், சர்வதேச பள்ளி முதல்வர் பிரான்ஸிலின்டாபி ஒலிம்பிக்கொடி ஏற்றினர். தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் விளையாட்டுப்போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாணவி ஜனஸ்ருதி நன்றி தெரிவித்தார். பள்ளி தாளாளர் நந்தகோபாலகிருஷ்ணன், பள்ளி நிர்வாகத்தினர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.