/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அங்கன்வாடி மையங்களில் விளையாட்டு பொருட்கள்
/
அங்கன்வாடி மையங்களில் விளையாட்டு பொருட்கள்
ADDED : மார் 20, 2025 11:32 PM

உடுமலை,: உடுமலை சுற்றுப்பகுதி அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சமூக நலத்துறையின் சார்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின்வாயிலாக, அங்கன்வாடி மையங்களுக்கு பல்வேறு நலத்திட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதில் குழந்தைகளுக்கான கதை புத்தகங்கள், விளையாட்டு பொருட்களும் உள்ளது.
நடப்பாண்டுக்கான விளையாட்டு பொருட்கள், உடுமலை வட்டார அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்பட்டன. உடுமலை சுற்றுப்பகுதியில், 136 மையங்கள் உள்ளன.
மையங்களுக்கு சிறிய அளவிலான கூடைபந்து செட், வண்ண பந்துகள் உட்பட பல்வேறு விளையாட்டு பொருட்கள் தலா ஒரு செட் வழங்கப்பட்டுள்ளன. மைய குழந்தைகள் உற்சாகத்துடன் விளையாட்டு பொருட்களை பயன்படுத்தினர்.