
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்: அவிநாசி அருகேயுள்ள கோதபாளையம் பகுதியில் வசிக்கும் மான்கள், தண்ணீர், உணவு தேடி செல்கையில், தவறி பல்வேறு பகுதிகளுக்கு செல்வது வாடிக்கையாக உள்ளது. அவ்கையில், பல்லடம் - சேகாம்பாளையம் ரோட்டில் உள்ள நீரோடையை ஒட்டிய பகுதியில், புள்ளி மான் ஒன்று 'விசிட்' செய்துள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'நேற்று காலை புள்ளிமான் ஒன்று, வழிதவறி வந்துவிட்டது. ஓடை மற்றும் விளை நிலங்களுக்குள் சுற்றி வருகிறது. தெருநாய்கள் உள்ள நிலையில், அவற்றால் மானின் உயிருக்கு அச்சம் உள்ளது. எனவே, மானை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும்,' என்றனர்.

