
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி;அவிநாசி பேரூராட்சி, 11வது வார்டுக்குட்பட்ட நாயக்கன் தோட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்தது.
அதன்பின், தீ மளமளவென பரவி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கிடையேயும் தீ பிடிக்க துவங்கியது. அருகில் வசிப்போர், அவிநாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

