/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீராதா - கிருஷ்ணர் திருக்கல்யாண உற்சவம்
/
ஸ்ரீராதா - கிருஷ்ணர் திருக்கல்யாண உற்சவம்
ADDED : பிப் 05, 2024 01:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர், ஸ்ரீராமகிருஷ்ண பஜனை மடத்தில், ஸ்ரீராதா - கிருஷ்ணர் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது.
திருப்பூர், ஓடக்காடு, காவேரி வீதியில் உள்ள காஞ்சி மடம் கிளையில், ஸ்ரீராமகிருஷ்ண பஜனை மடம் உள்ளது. ஸ்ரீமுரளிதர பாகவதர் குழுவினர் தலைமையில், ஸ்ரீராதா கிருஷ்ணர் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.
நேற்று முன்தினம் காலையில் இருந்து, நேற்று காலை வரை, தொடர்ந்து பல்வேறு பஜனை நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு உஞ்சவிருத்தியும், தொடர்ந்து ஸ்ரீராதாகிருஷ்ணர் திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. ஸ்ரீஆஞ்சநேயர் உற்சவத்தை தொடர்ந்து, மகா தீபாராதனை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

