/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீசுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷகம்
/
ஸ்ரீசுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : ஜன 20, 2024 02:25 AM
அவிநாசி;அவிநாசி அருகே பழங்கரை கிராமம், அவிநாசிலிங்கம்பாளையம் ஸ்ரீசுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா, நாளை (21ம் தேதி) நடக்கிறது
கோவிலில், கும்பாபிேஷக விழா, நேற்று காலை, மங்கள இசை, விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. மகா கணபதி ேஹாமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. மாலையில், வாஸ்துசாந்தியை தொடர்ந்து, முதல் கால வேள்வி பூஜைகள் நடந்தது.
இன்று, விநாயகர் வழிபாடு மற்றும் இரண்டம் கால வேள்வி பூஜைகளும், மாலையில் மூன்றாம் கால வேள்வி பூஜையும் நடக்கிறது.
நாளை காலை, 5:30 மணிக்கு, நான்காம் கால வேள்வி பூஜைகள் முடிந்து, காலை, 8:30 மணி முதல், 10:00 மணிக்குள், மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.
தொடர்ந்து, நாளை காலை, 10:30 மணிக்கு மேல் மகேஸ்வர பூஜை, தசதானம், தசதரிசனம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடக்க உள்ளன. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.