/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீஅன்னபூர்ணா கிளை காங்கயத்தில் திறப்பு
/
ஸ்ரீஅன்னபூர்ணா கிளை காங்கயத்தில் திறப்பு
ADDED : அக் 07, 2025 01:02 AM

திருப்பூர்:கோவையின் பெருமை எனப்படும் உணவக நிறுவனமான, ஸ்ரீஅன்னபூர்ணா, தனது 21வது கிளையை காங்கயத்தில் நேற்று திறந்தது. குமரன் ஆயில் மில்லை சேர்ந்த பொன்னுசாமி, திறந்துவைத்தார். ஸ்ரீஅன்னபூர்ணா குழும நிர்வாக இயக்குனர் சீனிவாசன், இணை நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ், தலைமைச்செயல் அதிகாரி ஜெகன் தாமோதரசுவாமி, எக்சிகியூட்டிவ் இயக்குனர் விவேக் சீனிவாசன், கார்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
இதில், 12,500 சதுர அடி பரப்பிலான கிளையில், பிரத்யேக டைனிங் ஹால், பார்ட்டி ஹால், இனிப்பு மற்றும் பேக்கரிப்பிரிவு, விசாலமான வாகன நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. தரைத்தளத்தில் அமைந்துள்ள டைனிங் ஹாலில் ஒ ரே நேரத்தில் 150 பேர் உணவருந்தமுடியும். முதல் விற்பனையை சண்முகம் துவங்கிவைக்க, அரவிந்த் பெற்றுக்கொண்டார். முதல் தளத்தில் ஆதிரை என்ற 6,500 சதுர அடி பார்ட்டி ஹாலை, காங்கயத்தை சேர்ந்த டாக்டர் விஷ்ணு ஆனந்த் திறந்துவைத்தார். இங்கு 500 பேர் வரை அம ர்ந்து சுப நிகழ்வுகள், பிறந்தநாள் உள்ளிட்ட கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும். சமையலறையை யுனைடெட் கார்பன் நிறுவனத்தைச் சேர்ந்த ஜெயந்தன் திறந்துவைத்தார். 1500 சதுர அடி பரப்பிலான பிரத்யேக இனிப்பு மற்றும் பேக்கரிப் பிரிவு அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் 100 கார்களை நிறுத்த முடியும்.