/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீகருப்பராயன் சுவாமி கோவில் பொங்கல் விழா
/
ஸ்ரீகருப்பராயன் சுவாமி கோவில் பொங்கல் விழா
ADDED : மே 01, 2025 04:27 AM

அனுப்பர்பாளையம் : அனுப்பர்பாளையம் புதுாரில், ஸ்ரீகருப்பராய சுவாமி கோவிலில், பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பூர், அனுப்பர்பாளையம்புதுாரில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ கருப்பராய சுவாமி, ஸ்ரீ கன்னிமார் சுவாமி கோவில்களில் பொங்கல் விழா கடந்த மாதம் 23ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
விழாவையொட்டி, நேற்று காலை 6:00 மணி முதல் ஸ்ரீ கருப்பராய சுவாமி, ஸ்ரீ கன்னிமார் சுவாமிக்கு பக்தர்கள் மாவிளக்கு மற்றும் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நேற்றிரவு ஸ்ரீ கருப்பராய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பொங்கல் விழாவில், இன்று காலை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.