ADDED : மே 11, 2025 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை பள்ளபாளையம் அருகே உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜைகள் கடந்த 8ம் தேதி துவங்கியது.
அன்று மாலை, 5:00 மணிக்கு, முதற்கால ேஹாமம் துவங்கியது. தொடர்ந்து, இரண்டாம், மூன்றாம் கால ேஹாமம் நடைபெற்றது. நேற்று காலை காலை சிறப்பு ஹோமம், நவகலச திருமஞ்சனம் சிறப்பு பூஜையும் நடந்தது.
திரளான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்தனர்.