/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இடியும் அபாயத்தில் இலங்கை அகதிகள் வீடுகள்
/
இடியும் அபாயத்தில் இலங்கை அகதிகள் வீடுகள்
ADDED : அக் 13, 2024 11:00 PM

பல்லடம் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த, பருவாய் கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு, 105 குடும்பங்கள் ஆரம்ப காலத்தில் இருந்தன.
தற்போது, 54 குடும்பங்கள் வசிக்கின்றன. இதில், 18 வீடுகள் கடந்த சில ஆண்டுக்கு முன் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்பட்டன. மீதமுள்ள, 36 வீடுகள், இடிந்து விடக்கூடிய நிலையில் மிகவும் மோசமாக உள்ளன.
குடியிருப்பாளர்கள் கூறுகையில், ''கடந்த ஆண்டு அமைச்சர்கள் இங்கு ஆய்வு செய்தனர். 'குடியிருப்புகள் இருப்பது மந்தை புறம்போக்கு நிலம்; இதை வகை மாற்றம் செய்த பின், அனுமதி பெற்ற பின்னரே குடியிருப்பு கட்ட முடியும்' என்று கூறியிருந்தனர். அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், பணிகள் துவங்கவில்லை. இங்குள்ள குடியிருப்புகள் மோசமான நிலையில் உள்ளன. சில வீடுகளின் மேற்கூரைகள் முழுவதுமாக சேதம் அடைந்து, இடிந்து விடக்கூடிய அபாயம் உள்ளது. தொடர் மழை பெய்து வரும் நிலையில், அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம். எனவே, 36 வீடுகளை இடித்து அகற்றி விட்டு, புதிய வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.