/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
/
ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : ஜன 24, 2026 04:42 AM

சேவூர்: சேவூர் அருகே புலிப்பார் ஊராட்சி, ஈசக்கண்ணன் புதுாரில் ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் மஹா கும்பாபிேஷகம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக நேற்று முன்தினம், முதல் கால யாக பூஜையில் கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி, வேதிகா அர்ச்சனை ஆகியன நடைபெற்றது. தொடர்ந்து, கரடிகோவிலில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாலிகை எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.
நேற்று அதிகாலை இரண்டாம் கால யாக பூஜையில் நாடி சந்தானம், பூர்ணாகுதி முடிந்து கலச புறப்பாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோபுர கலசங்கள் மற்றும் ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் மூலவ மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, மஹா தீபாராதனை, தச தானம், தசதரிசனம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஈசகண்ணன்புதுார் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

